சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராக இருந்து வருபவர் சித்து என்கிற VJ சித்ரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிவிட்டார்.ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.

Pandian Stores VJ Chitra Galatta Dream Lover 2020

இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.தற்போது TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.இது தவிர ஹீரோயினாக கால்ஸ் என்ற படத்தில் கால் சென்டரில் வேலைபார்க்கும் பெண்ணாக நடித்து வருகிறார்.

Pandian Stores VJ Chitra Galatta Dream Lover 2020

கலாட்டா சார்பாக சின்னத்திரையின் கனவு கன்னி யார் என்பதை முடிவு செய்ய ட்ரீம் லவ்வர் 2020 என்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.அதில் சித்ரா வெற்றிபெற்றார்.இதனையடுத்து கலாட்டாவுடனான சிறப்பு நேர்காணலில் தன்னுடைய சின்னத்திரை பயணம் குறித்து பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்