வெங்கட் பிரபு மற்றும் STR இணையும் திரைப்படம் மாநாடு. இப்படத்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. எப்போதும் தனது எதார்தமான கருத்தை மைய்யமாக வைத்து படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்தில் அரசியல் கலந்த கமர்ஷியல் கருத்தை கதையில் வைத்து எடுக்கவுள்ளார். 

venkatprabhu maanaadu

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். ப்ரோடக்ஷன் டிசைனராக ராஜீவன் இடம்பெற்றுள்ளார். சில்வா ஸ்டண்ட் மாஸ்டராக உள்ளார். வாசுகி பாஸ்கர் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகிறார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 

sureshkamatchi sureshkamatchi

இந்த படத்தில் அப்துல் காலிக்காக STR நடிக்கிறார். படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. தற்போது படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு பாடல்களை கேட்டதாகவும், பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளதென பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் யுவன்ஷங்கர் ராஜா சிறந்த இசையை தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் யுவன் ரசிகர்கள்.