2016-ல் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா,ரித்து வர்மா நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் pelli choopulu.தருண் பாஸ்கர் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் தமிழ் ரீமேக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

A Studios LLP, A Havish Production, SP Cinemas, Madhav Media and Third Eye Entertainment இணைந்து இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்றனர்.ஓ மணப்பெண்ணே என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார்.

ஹரிஷ் கல்யாண் இந்த படத்தின் ஹீரோவாக நடித்துள்ளார்.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.மேலும் பல நட்சத்திங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக அக்டோபர் 22ஆம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் நிலையை படம் பெற்றுள்ளது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான போதை கணமே பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்