சூப்பர்ஹிட் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை ! அதிர்ச்சியில் நடிகை
By Aravind Selvam | Galatta | May 20, 2022 13:22 PM IST
தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.
இவர்களது சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.செம்பருத்தி,ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி என்று 1000 எபிசோடுகளை கடந்த சீரியல்கள் ஆனாலும் கோகுலத்தில் சீதை,நீதானே எந்தன் பொன்வசந்தம்,புது புது அர்த்தங்கள் என்று புதிய சீரியல்கள் என சூப்பர்ஹிட் சீரியல்களை தொடர்ந்து ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
ஜீ தமிழில் சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பை தொடங்கி அசத்தி வரும் தொடர் நினைத்தாலே இனிக்கும்.ஆனந்த் செல்வன்,ஸ்வாதி சர்மா,ஜனனி பிரபு,ஸ்வேதா ஸ்ரிம்டன்,ப்ரீத்தி குமார் என பல நட்சத்திரங்கள் இந்த தொடரின் முன்னணி வேடங்களில் நடித்து அசத்தி வருகின்றனர்.
இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரில் நடித்து வந்த ஸ்ரீநிதி சில காரணங்களால் விலக இவருக்கு பதிலாக பிரபல சீரியல் நடிகை தாட்சாயிணி நடிக்கிறார்,இவரது எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.
20/09/2018 05:07 PM
Ninaithale Inikkum gets a digital makeover
11/09/2013 11:00 PM
Ninaithale Inikkum to be re-released
23/07/2012 01:00 PM
Ninaithale Inikkum crosses 50 days in Chennai
23/10/2009 12:00 AM