சிறந்த நடிகையாகவும் ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் வாஷி. பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள வாஷி திரைப்படம் வருகிற ஜூன் 17-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

முன்னதாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே உதயநிதி ஸ்டாலின் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று (மே 20ஆம் தேதி) உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பாலிவுட்டின் சூப்பர் ஹிட்டான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தை பார்வையிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். கீர்த்தி சுரேஷ் படக்குழுவினரை பாராட்டி பதிவிட்ட அந்த ட்விட்டர் பதிவு இதோ…