“பேய் பிடித்திருப்பதாக” கூறி, நிலக்கரியால் தீ மூட்டப்பட்ட தீ குழியில் இளம் பெண் ஒருவர் நிற்கவைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் தெர்லுங்கானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சிக்கரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் விக்ராபாத் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்லூரியில், 19 வயதான இளம் பெண் ஒருவர் படித்து வருகிறார்.

தனது பெற்றோருடன் தங்கி அந்த இளம் பெண் படித்து வந்த நிலையில், அந்த இளம் பெண்ணுக்கு கடந்த சில நாட்களாக திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது. 

அப்போது, அந்த இளம் பெண்ணை நேரில் வந்து பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள், “உங்கள் மகளுக்கு பேய் பிடித்திருக்கிறது. அதனால், உங்கள் மகளை அருகில் உள்ள மாந்தீரிகவாதியிடம் அழைந்து சென்று பேய் ஓட்டுங்கள்” என்று, தவறான ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். 

இதனை நம்பிய அந்த இளம் பெண்ணின் பெற்றோர், தனது உறவினர்கள் கூறியபடியே, அந்த அப்பாவி பெற்றோர் உடல் நலம் பாதிக்கப்பட்ட தங்களது மகளை, அந்த பகுதியில் மாந்தீரிகம் செய்யும் ஒரு நபரிடம் அழைத்து சென்று உள்ளனர். 

அதன்படியே, அந்த மந்திரிவாதி “உங்கள் பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கிறது. அதை ஓட்டவும், இளம் பெண் குணமடையவும் தீக்குழியில் இறங்குதல் உள்ளிட்ட சில பூஜைகள் செய்ய வேண்டி உள்ளது” என்று, கூறியிருக்கிறார். 

இதனையடுத்து, அந்த மாந்திரவாதியின் பேச்சை கேட்ட அந்த இளம் பெண்ணின் பெற்றோர், பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

அதன் படி, அங்கு “நிலக்கரியால் எரியூட்டப்பட்ட தீக்குழியில்” அந்த இளம் பெண்ணை, அந்த மந்திரவாதி நடக்க வைத்து உள்ளார். 

அப்போது, அந்த கடும் நெருப்பு கனலின் வெப்பத்தில் அந்த இளம் பெண் மயக்கமடைந்து அந்த தீக்குழியில் விழுந்து உள்ளார். 

எனினும், அந்த நேரத்தில் அதன் அருகில் நின்றுகொண்டிருந்த அந்த மந்திரவாதி, அந்த தீக்குழியில் விழுந்த அந்த பெண்ணை மீண்டும் எழுந்து நிற்க வைத்து உள்ளார். 

இதனால், அந்த இளம் பெண்ணின் உடல் முழுவதும், கடுமையான தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து, அந்த இளம் பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட அந்த மந்திரவாதி மீது வழக்குப் பதிவு செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, மோசடியாக அந்த இளம் பெண்ணை தீ குளியில் தள்ளி ஏமாற்றிய அந்த மந்திரவாதியை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.