சிறந்த நடிகராகவும் சீரான ஒளிப்பதிவாளராகவும் திகழ்பவர் நட்டி நட்ராஜ். பல திரைப்படங்களில் இவர் நடித்தாலும், சதுரங்க வேட்டை திரைப்படம் இவரை புகழின் உச்சத்தில் கொண்டு சேர்த்தது. இவரது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ளார். கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் நம்ம வீட்டு பிள்ளை நடித்திருந்தார். 

Natraj Thanked Fans For Namma Veetu Pillai Movie

நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நட்ராஜ் அவர்களுக்கு அதிக பாராட்டுகளை பெற்றுத்தந்தது. இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில், நிறைய  தொலைபேசி  வாழ்த்துக்கள்,  அழைப்புகள்..  நன்றி சன் தொலைக்காட்சி,  நன்றி சன் pictures.. நன்றி பாண்டியராஜ் சார்...  நன்றி சிவகார்த்திகேயன் சார்... நன்றி நீரவ் ஷா...அனைத்து சக நடிகர்கள்,  தொழில் நுட்ப கலைஞர்கள்.. பாராட்டுகள் விருதுக்கு மேலானது என்று பதிவு செய்துள்ளார். 

Natraj Thanked Fans For Namma Veetu Pillai Movie

காட்ஃபாதர் படத்திற்கு பிறகு சிபிராஜ் நடித்த வால்டர் என தொடர்ச்சியாக இவரது படங்கள் இந்த ஆண்டு வெளியானது. இவரது இந்த பதிவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர் ட்விட்டர் வாசிகள்.