கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் வீரர்களும் சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். 

David Warner Imitates Prabhu Devas Mukkala Dance

இந்நிலையில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தற்போது மனைவி குழந்தைகளுடன் டிக் டாக்கில் அசத்தி வருகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான அல வைக்குந்தபுரம்லோ படத்தின் பாடல்களுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டார். 

David Warner Imitates Prabhu Devas Mukkala Dance

தற்போது முக்காலா முக்காபுலா என்ற சூப்பர்ஹிட் பாடலுக்கு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இணைந்து நடனமாடுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா மற்றும் நக்மா நடித்த காதலன் திரைப்படத்தில் இந்த பாடல் இடம் பெற்றிருக்கும். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Who was better @candywarner1 and I or @theshilpashetty 😂😂 #theoriginals @prabhudevaofficial

A post shared by David Warner (@davidwarner31) on