தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ArjunDas About Vijay Master Trailer Release

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

ArjunDas About Vijay Master Trailer Release

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.நேற்று இன்ஸ்டாகிராமில் லைவாக  வந்த இந்த படத்தின் முக்கிய வில்லனில் ஒருவரான அர்ஜுன்தாஸ் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.மாஸ்டர் ட்ரைலரை ஆறு தடவைக்கு மேல் பார்த்துவிட்டேன் மரணமாஸாக இருக்கிறது.

விஜய் பேசும் ஒரு வசனத்தை கேட்டு ரசிகர்கள் ஆர்பரிக்கப்போகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.படம் நிச்சயமாக தியேட்டரில் வெளியாகும் ரசிகர்களுடன் இணைந்து அந்த முதல் காட்சியை பார்க்க ஆவலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.