இன்றைய இளைஞர்களின் favourite ஆன இசையமைப்பாளர் அனிருத்.இவரது இசையில் வெளிவரும் பாடல்கள்  அனைத்தும் ஹிட் அடித்து விடும்.கடைசியாக சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தில் பணியாற்றியிருந்தார்,

Anirudh About Master Release Thalapathy Phonecall

இதனை தொடர்ந்து விஜயின் மாஸ்டர்,சிவகார்த்திகேயனின் டாக்டர்,கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான விஜயின் மாஸ்டர் பாடல்களும் ஹிட் அடித்துள்ளன.

Anirudh About Master Release Thalapathy Phonecall

கொரோனா காரணமாக பிரபலங்கள் தங்களது ரசிகர்களுடன் நேரத்தை அவ்வப்போது செலவிட்டு வருகின்றனர்.நேற்று ஹலோ ஆப்பில் லைவாக வந்த அனிருத் மாஸ்டர் குறித்த சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.ஏப்ரல் 9ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்பதற்காக நாங்கள் எல்லாரும் தீவிரமாக உழைத்தோம்  தற்போதுள்ள சூழலால் அது நடக்காமல் போனது.இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் ஆரம்பித்து விட்டன என்று அனிருத் தெரிவித்தார்.

Anirudh About Master Release Thalapathy Phonecall

தளபதி விஜயிடம் இது குறித்து போனில் பேசினேன் அவரும் இந்த படம் வரும்போது செமயா வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்று அனிருத்தெரிவித்தார்.கடைசியாக குட்டி ஸ்டோரி பாடலை பாடி தனது லைவை நிறைவு செய்தார் அனிருத்.