தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ பட ஸ்பெஷல் ட்ரீட்... மிரட்டலான ஆண்டனி தாஸ் GLIMPSE SOUNDTRACK இதோ!

தளபதி விஜயின் லியோ படத்திலிருந்து ஆண்டனி தாஸ் GLIMPSE ட்ராக் வெளியீடு,thalapathy vijay in leo movie glimpse of antony das soundtrack out now | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் கூட்டணிகள் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தில் இருந்து ஸ்பெஷல் ட்ரீட்டாக ஒரு புதிய சவுண்ட் ட்ராக் ஒன்று வெளியானது. மாநகரம் கைதி என தனது முதல் இரண்டு திரைப்படங்களிலேயே இந்திய சினிமாவில் மிகப்பெரிய கவனம் ஈர்த்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த இரண்டு திரைப்படங்களும் வாலி வீட்டில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது தனது மூன்றாவது படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து மாஸ்டர் எனும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நான்காவது படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார். அடுத்ததாக லியோ படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்க்குதா நாயகனாக நடிக்கும் தலைவர்171 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கடந்த 2021-ல் மெகா ஹிட்டான மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகி வரும் படம் தான் லியோ. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். 

பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 6 மாதங்களிலு 125 நாட்கள் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. 50% தளபதி விஜய் படம் 50% லோகேஷ் படம் என்று இல்லாமல் லியோ படம் 100% லோகேஷ் படமாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக கடந்த ஜூலை 29ஆம் தேதி நடிகர் சஞ்சய் அவர்களின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் லியோ படத்தில் அவர் நடித்திருக்கும் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் வகையில் அட்டகாசமான புதிய GLIMPSE ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஆண்டனி தாஸ் GLIMPSE வீடியோவின் சவுண்டு டிராக் தற்போது வெளியாகி இருக்கிறது. அட்டகாசமான அந்த ஆண்டனி தாஸ் GLIMPSE வீடியோவின் சவுண்ட் ட்ராக் இதோ…
 

மணிப்பூர் மக்களுக்காக உதவ முன்வந்த நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா... குவியும் பாராட்டுகள்! விவரம் உள்ளே
சினிமா

மணிப்பூர் மக்களுக்காக உதவ முன்வந்த நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா... குவியும் பாராட்டுகள்! விவரம் உள்ளே

சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான் பட புது சர்ப்ரைஸ்... மாளவிகா மோகனின் பிறந்தநாள் பரிசாக வந்த அசத்தலான GLIMPSE இதோ!
சினிமா

சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான் பட புது சர்ப்ரைஸ்... மாளவிகா மோகனின் பிறந்தநாள் பரிசாக வந்த அசத்தலான GLIMPSE இதோ!

மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட
சினிமா

மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட "படிக்காத பக்கங்கள்"- வைகைப்புயல் வடிவேலுவின் அட்டகாசமான DELETED SCENE இதோ!