சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக இந்த தொடரின் பழைய எபிசொட்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.இந்த தொடரில் நடித்துள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுக்கும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்.இவர்களது புகைப்படங்கள்,விடீயோக்களை,ஸ்டோரிக்கள் என்று எது வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடும்.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் செலவிட்டு வருகின்றனர் இதற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினரும் விதிவிலக்கல்ல.தங்கள் பக்கத்தில் இருந்து லைவ் வருவது,ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,அவர்கள் வைக்கும் சின்ன சின்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்று தங்கள் நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

கடந்த 8ஆம் தேதி முதல் இந்த தொடரின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இது குறித்து இந்த தொடரில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் தங்கள் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் ஜூலை 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்படும் என்று விஜய் டிவி அறிவித்துள்ளனர்.

லாக்டவுனுக்கு பிறகு இந்த தொடரின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ட்ரெண்ட் அடித்து வருகின்றன.இந்த தொடரில் மீனாவின் வளைகாப்பை முன்னிட்டு செப்டம்பர் 11ஆம் தேதி 3 மணி நேரமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒளிபரப்பானது.இந்த சிறப்பு ஒளிபரப்பு நல்ல வரவேற்பை பெற்றதோடு , TRP-யிலும் சாதனை படைத்தது.

சமீபத்தில் இந்த தொடரில் முல்லையாக நடித்து அசத்தி வரும் சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.தங்களின் சிறப்பு எபிசோடுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்த அவர்.வரும் திங்கள் முதல் அதாவது 21ஆம் தேதி முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒரு மணிநேரமாக ஒளிபரப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.தங்கள் மனம் கவர்ந்த தொடர் ஒரு மணி நேரமாக ஒளிபரப்பாவதை அறிந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

தற்போது இந்த தொடரில் நிஜ வாழ்க்கை ஜோடியான யோகேஸ்வரன் மற்றும் மைனா நந்தினி இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர் என்ற அறிவிப்பை யோகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.கதிர்-முல்லை இருவரும் சென்னை கிளம்புவது போல தற்போது கதைக்களம் உள்ளது.அங்கு உள்ள கதிரின் நண்பராக யோகேஷ் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#yeswearebacktogether #pandianstores❤ #reallifepartners #becomingreels @myna_nandhu

A post shared by yogi✌✌ (@yogeshwaram_official) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ready Camara rooooooolllllllllliiinnngggggg sir action Shoot mode start 😍😍😍❤️

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on