இந்த லாக்டவுனில் 3, 4 தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்துள்ளார் நம் STR. தற்போது இயக்குனர் நார்தன் இயக்கத்தில் தயாராகி வரும் மஃப்டி தமிழ் ரீமேக் மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு இந்த இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார். அது தவிர்த்து ஹன்சிகா நடிக்கும் மஹா படத்திலும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் STR. இந்த லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த படப்பிடிப்புகளில் STR கலந்துகொள்வார் என தெரிகிறது. 

Mufti Director Narthan And Yash Meet To Discuss The Story Of Their Film

இயக்குனர் நார்தன் அடுத்ததாக கன்னட சூப்பர்ஸ்டார் யஷ் வைத்து படம் இயக்கவுள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது. இந்நிலையில் இந்த ப்ராஜெக்ட் பற்றி இயக்குனர் கூறிய ருசிகர தகவல் ஒன்று கலாட்டா செவிகளுக்கு எட்டியது. லாக்டவுனில் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கிறோம். ஒருவருக்கொருவர் தொலைபேசி வாயிலாக தான் தொடர்பு கொள்ள முடிகிறது. இனிமேல் தான் நடிகர் யஷ் அவர்களை நேரில் சந்தித்து ஸ்கிரிப்ட் குறித்து பேச வேண்டும். இப்போதைக்கு ஸ்கிரிப்ட் டிஸ்க்ஷனில் தான் உள்ளது.

Mufti Director Narthan And Yash Meet To Discuss The Story Of Their Film

இந்த லாக்டவுனில் ஸ்கிரிப்ட் கூடுதல் பொலிவுபெற்று, அதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று சாண்டில்வுட் வட்டாரம் தெரிவிக்கின்றது. கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் மீதம் உள்ள படப்பிடிப்புக்கு பின்னரே யஷ் அடுத்த படத்திற்கு தயாராவார் என்று கூறப்படுகிறது. மார்க்கெட் ரீதியாக யஷ் டாப்பில் உள்ளதால் கூடுதல் கவனத்துடன் ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.