ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் அட்லீ.இதனை தொடர்ந்து இவர் தளபதி விஜயுடன் இணைந்து தெறி,மெர்சல் என்று பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்திருந்தார்.

Atlee praises designer Gopi Prasanna for Retro Movie Posters

இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான பிகில் படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானை அட்லீ இயக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்தது.

Atlee praises designer Gopi Prasanna for Retro Movie Posters

தற்போது இவர் மாஸ்டர் படத்தின் போஸ்டர் டிசைனரை ட்விட்டரில் புகழ்ந்துள்ளார்.மாஸ்டர் படத்தின் டிசைனர் கோபி பிரசன்னா சில கிளாசிக் படங்களின் போஸ்டர்களை தயார் செய்து ட்விட்டரில் வெளியிட்டுவந்தார்.இதனை வேற லெவல் நீங்க என்று விஜய் ஸ்டைலில் அவர் புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.