தமிழ் திரையுலகின் சிறந்த நடிகராகவும், ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருப்பவர் நடிகர் சூர்யா. இன்று சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு செய்து வருகின்றனர். மேலும் நடிப்பின் நாயகன் எனும் ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நடிகர் சூர்யா பற்றி பேசிய வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தை அசத்தி வருகிறது. அதில், என்னுடைய விருப்பமான நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். முதலில் சிங்கம் படத்தை ஹிந்தியில் பார்த்தேன், பின் நண்பர்கள் தமிழில் வெளியான வெர்ஷனை பார்க்க சொன்னார்கள். அப்போது நான் சர்வதேச விமானத்தில் சென்றுக்கொண்டிருந்த போது சப்டைட்டிலுடன் சிங்கம் படத்தை பார்த்து ரசித்தேன். 

அப்போது தான் தெரிந்தது சூர்யா எனும் மகாநடிகரை பற்றி. அவருடைய நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அற்புதமான நடிகர். பின் அவர் நடித்த கஜினி திரைப்படத்தையும் பார்த்தேன். ஒரு முறை மும்பை ஹோட்டலில் தங்கியிருந்த போது, சூர்யாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இருவரும் சந்தித்தோம் என்று பேசியுள்ளார் தோனி. 24 படத்தில் தோனியிடம் செல்ஃபி எடுக்கும் காட்சி இருக்கும். அதை எப்படி ரசித்தோமோ, அதே போல் இருக்கு தோனி கூறிய விஷயம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பணிகள் முடிவடைந்து கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு அருவா, வாடிவாசல் ஆகிய இரண்டு படங்களில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா தந்தை - மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. வாடிவாசல் என்ற நாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுத்தில் 1959-ம் ஆண்டு வெளியானது.