விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று அரண்மனை கிளி.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் பிரகதி நடித்து வருகிறார்.பாக்கியராஜின் வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் இவர்.தொடர்ந்து தெலுங்கு,மலையாளம் படஙக்ளில் ஹீரோயினாக நடித்தார்.தனது திருமணத்துக்கு பிறகு முக்கிய துணை வேடங்களிலும்,சீரியல்களிலும் நடித்து வந்தார்.

இவர் தற்போது நடித்து வரும் அரண்மனை கிளி தொடரில் இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் கொண்டவரான பிரகதி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களையும்,வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார்.இவர் நடித்து வந்த அரண்மனை கிளி சீரியலின் ஷூட்டிங் கொரோனா காரணாமாக தடைபட்டது.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தது.இந்த தொடரில் மோனிஷா,சூர்ய தர்ஷன் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.இவர்கள் இருவருக்கும் தனி தனியாக ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.இருவருக்கும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் ரசிகர் பக்கங்கள்,போட்டோ வீடியோ எடிட்க்கள் என்று ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வந்தனர்.

பிரகதி,நீலிமா ராணி,காயத்ரி யுவராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.200 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிவந்த இந்த தொடரின் ஒளிபரப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.லாக்டவுனுக்கு முன்பே இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக நீலிமா ராணி தெரிவித்திருந்தார்.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து சீரியல் ஷூட்டிங்குகள் அனைத்தும் தொடங்கின.ஆனால் விஜய் டிவியின் அரண்மனை கிளி ஷூட்டிங் தொடங்கவில்லை இதனால் இந்த தொடர் என்ன ஆச்சு என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.இந்த தொடர் கைவிடப்பட்டதாக இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் இன்ஸ்டாகிராம் லைவ்வில் தெரிவித்தார்.முக்கிய நடிகர்கள் பலரும் வெவ்வேறு ஊர்களில் உள்ளதால் இந்த தொடர் கைவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் கொண்டவரான பிரகதி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களையும்,வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார்.தற்போது அந்த அரபிக் கடலோரம் பாடலுக்கு அசத்தலாக நடனமாடி இவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த வயதிலும் ஹீரோயின்களுக்கு நிகராக இவர் போடும் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Chin up... you are not struggling, you are in midst of conquering 🤩😇💫

A post shared by Pragathi Mahavadi (@pragstrong) on