சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் ஸ்ருதி ராஜ்.இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபலமான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் கிடைத்தனர்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் தொடரின் மூலம் சின்னத்திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவராக அவதரித்தார் ஸ்ருதி.

ஆபீஸ் சீரியலின் வெற்றியை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்,அபூர்வ ராகங்கள்,அழகு உள்ளிட்ட தொடர்களில் நடித்திருந்தார்.ஒரு சிறிய பிரேக்கிற்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஸ்ருதி.

தெய்வமகள் தொடரின் மூலம் பிரபலமான கிருஷ்ணா இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.இந்த தொடர் மதியநேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.பல முன்னணி சீரியல் நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பான திருப்பங்களுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.தற்போது இந்த தொடரில் நடித்து வந்த நடிகை மலர் சில காரணங்களால் விலக இவருக்கு பதிலாக செம்பருத்தி,வனத்தைப்போல உள்ளிட்ட தொடர்களில் நடித்து பரிபாலமான மௌனிகா சுப்பிரமணியம் இனைத்துளளார்.இவரது எபிசோடுகள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.