மலேசியாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த ராக்கி பாய்.! ரசிகர்கள் படையுடன் யாஷ் வீடியோ இணையத்தில் வைரல்...

மலேசியாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் யாஷ் வைரல் வீடியோ உள்ளே - KGF rocky bhai Yash Mass entry at Malaysia video goes viral | Galatta

தனக்கென தனி பாணி உருவாக்கி ரசிகர் கூட்டத்தை பெருக வைத்து கொண்டிருக்கும் ராக்கிங் ஸ்டார் யாஷ். கடந்த 2008ம் ஆண்டில் வெளியான ராக்கி படம் மூலம் கன்னட திரையுலகில் ஹீரோவாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல அட்டகாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்தார். கூக்ளி, மிஸ்டர் அண்ட் மிர்சர்ஸ் ராம்சாரி, கிராதகா, ராஜஹுலி போன்ற திரைப்படங்கள் நடிகர் யாஷை முன்னணி நடிகராக கன்னட திரையுலகில் மாற்றியது, மேலும் தொடர் அட்டகாசமான ஹிட் திரைப்படங்கள் மூலம் நடிகர் யாஷ் தென்னிந்திய ரசிகர்களாலும் வரவேற்கப்பட்டார். பின்னர் கடந்த 2018 இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கேன்ஸ்டர் கதைகளத்தில் உருவான  கேஜிஎஃப்’ படம் மூலம் இந்திய அளவு பிரபலமானார். 

எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி கன்னட திரையுலகில் வெளியான கேஜிஎஃப்  திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டது. கேஜிஎஃப் படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு பிடிக்க கேஜிஎஃப் படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவு கொண்டாடினர். அதன்படி வசூல் ரீதியாக பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து கன்னட திரையுலகின் அசைக்க முடியாத மணிமகுடமாய் யாஷின் கேஜிஎஃப் திரைப்படம் அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியானது. முதல்  படத்தை காட்டிலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் நாடு முழுவதும் ஏகோபித்த வரவேற்பு அளித்து இமாலய பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ராக்கி கதாபாத்திரத்தில் யாஷின் தனித்துவமான ஸ்டைல். அவருக்கே உரிய பாணி ரசிகர்களை கவர அதன்படி யாஷை கன்னட திரையுலகில் இருந்து உயர்த்தி பான் இந்திய ஸ்டாராக மாற்றியது. தொடர்ந்து ரசிகர்களால் ராக்கி பாய் என்று அழைக்கபட்டு இன்று உலகமெங்கும் பல ரசிகர்கள் யாஷிற்கு உருவாகியுள்ளனர். தற்போது யாஷ் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கேஜிஎஃப் 3 பாகத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் யாஷ் மலேசியாவில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். அதிரடியான கேஜிஎஃப் லுக்கில் ரசிகர்கள் புடை சூழ கோலாலம்பூரில் உள்ள உயர் ரக நகை விற்பனையக திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார். மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் வழியே ஸ்டைலாக வந்த நடிகர் யாஷை ரசிகர்கள் ராக்கி பாய் ராக்கி பாய் என கூச்சலிட்டு ஆர்பரித்தனர். மேலும் யாஷ் உடன் புகைப்படம் எடுத்தும் ஆட்டோகிராப் பெற்றும் மகிழ்ந்தனர். பின்னர் விற்பனையகத்தை திறந்து வைத்த பின்னர் ரசிகளுடன் உரையாடினார் யாஷ். இந்நிகழ்வு குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக சிறப்பு தனி ஜெட்டில் யாஷ்  இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

ரசிகர்கள் படைசூழ மாஸாக Entry கொடுத்த நடிகர் Yash 🔥@TheNameIsYash #Yash #KGF #KGF2 #Yash19 #Galatta pic.twitter.com/nSfcf3wR8L

— Galatta Media (@galattadotcom) July 8, 2023

“சென்சார் போனால் தான் தெரியும்..” தளபதி விஜயின் லியோ படம் குறித்து பிரபல நடிகர் எஸ்வி சேகர்.. - Exclusive Interview உள்ளே..
சினிமா

“சென்சார் போனால் தான் தெரியும்..” தளபதி விஜயின் லியோ படம் குறித்து பிரபல நடிகர் எஸ்வி சேகர்.. - Exclusive Interview உள்ளே..

கோலாகலமாக நடைபெற்ற மறைந்த இயக்குனர் கே.வி ஆனந்த் வீட்டு திருமணம்.. – நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்..
சினிமா

கோலாகலமாக நடைபெற்ற மறைந்த இயக்குனர் கே.வி ஆனந்த் வீட்டு திருமணம்.. – நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்..

“ஒரு கட்டத்தில் வலியால் அழ ஆரம்பித்தேன்..” மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் பாவனி.. ஆறுதல் தெரிவிக்கும் திரைபிரபலங்கள், ரசிகர்கள்..
சினிமா

“ஒரு கட்டத்தில் வலியால் அழ ஆரம்பித்தேன்..” மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் பாவனி.. ஆறுதல் தெரிவிக்கும் திரைபிரபலங்கள், ரசிகர்கள்..