தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master Shoot Wrap Director Lokesh Kanagaraj Tweet

சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.பிப்ரவரி 14 அன்று மாஸ்டர் படத்தின் முதல் பாடலான குட்டிக்கதை பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

Master Shoot Wrap Director Lokesh Kanagaraj Tweet

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முழுவதுமாக நிறைவடைந்தது.இது குறித்து படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவர் தெரிவித்ததாவது 129 நாட்கள் இடைவிடாது இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துள்ளது.

Master Shoot Wrap Director Lokesh Kanagaraj Tweet

இது எனக்கு மிகவும் முக்கியமான ஒரு படம் , இந்த வாய்ப்பை எனக்கு அளித்த விஜய் அண்ணாவிற்கு நன்றி.இந்த இமாலய இலக்கை அடைய எனக்கு உறுதுணையாக இருந்த எனது இயக்குனர்கள் குழுவிற்கு நன்றி என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.