காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Suriya Arvaa Will Be Based On Brother Sentiment

இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகும் அருவா படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தை ஹரி இயக்கவுள்ளார்.இமான் இசையமைக்கும் இந்த படம் ஏப்ரல் மாதம் ஷூட்டிங் தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடந்து முடியவுள்ளது.

Suriya Arvaa Will Be Based On Brother Sentiment

படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் பிரபல பத்திரிகைக்கு பேட்டி அளித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இந்த படம் அண்ணன்-தம்பி பாசத்தை முன்வைத்து இருக்கும் என்றும் ஆக்ஷனை தவிர்த்து படத்தில் உருக்கமான காட்சிகளும் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

Suriya Arvaa Will Be Based On Brother Sentiment