பிரபு சாலமன் இயக்கத்தில் ராணாவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காடன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகி வருகிறது. ராணாவுடன் இணைந்து விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

vishnuvishal vishnu

ஈராஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.அசோக் குமார், இசையமைப்பாளராக சாந்தனு மொய்த்ரா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் பெரும் பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது.

vishnuvishal vishnuvishal vishnuvishal

ஏப்ரல் 2-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. தாய்லாந்தில் நடந்த படப்பிடிப்பின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதனைத்தொடர்ந்து தற்போது காணப்படாத கிளாமர் உலகம் எனும் பெயரில் புதிய மேக்கிங் வீடியோ வெளியானது. யானைப்பாகன் மாறனாக நடிக்கும் விஷ்ணு விஷால், இந்த கேரக்டருக்கு தன்னை எப்படி செதுக்கியுள்ளார் என்பதை பார்க்க முடிகிறது.