தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master Movie Lyricist Vishnu With Anirudh SaNa

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Master Movie Lyricist Vishnu With Anirudh SaNa

இந்த படத்தின் பொளக்கட்டும் பறை பறை மற்றும் போனா போகட்டும் பாடல்களை மாஸ்டர் படத்தின் உதவி இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணு எழுதியிருந்தார்.பொளக்கட்டும் பறை பறை பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியிருந்தார் அந்த ரெக்கார்டிங்கின் போது அனிருத் மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துகொண்ட விஷ்ணு இவர்கள் இருவருடனும் எனது 18 வயதிலேயே வேலைபார்ப்பேன் என்று யார் கூறியிருந்தாலும் நம்பியிருக்கமாட்டேன் ஆனால் இது நடந்தது மிகவும் மகிழ்ச்சி என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.