கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி நாடு மக்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார். நமது ஒற்றுமையை காட்டும் வகையில் 9 ஆம் தேதி, வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து, விளக்குகள் அல்லது தீபங்களை ஏற்றி 9 நிமிடங்களுக்கு ஒளிர செய்யும்படி கூறினார். இதனையடுத்து பொதுமக்களும், பிரபலங்களும் விளக்குகளுடன் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

lighting the lams

ஆனால் சிலர் இதை சரியாக புரிந்து கொள்ளாமல் கூட்டம் கூட்டமாக கையில் எரிபந்தங்களுடன் சுற்றித் திரிந்தனர். சிலர் பட்டாசுகளை வெடித்தனர். இது போன்ற சில விஷயங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. இந்நிலையில் இதுபற்றி நடிகர் ஷாந்தனு, யாருடா கும்பல் கும்பலா பட்டாசு வெடிக்கிறது. இது என்ன தீபாவளியா? கொஞ்சம் மரியாதை கொடுங்க என்று கொந்தளித்து பதிவு செய்துள்ளார். 

Shanthanu shanthanu

வானம் கொட்டட்டும் படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய ஷாந்தனு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். அடுத்ததாக லிப்ரா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் ஷாந்தனு.