தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.யூடியூப் என்று பல தளங்களில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகிறது.இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்று வாத்தி கம்மிங்.

இந்த பாடல் யூடியூப்,டிக்டாக் என்று பல தளங்களில் வைரலாக பரவி வருகிறது.லிரிக்ஸ் குறைவாகவும்.மியூசிக் அதிகமாகவும் உள்ள இந்த பாடல் மொழிகளை தாண்டி பலரிடம் பிரபலமாக இருந்தது.சமீபத்தில் இந்த பாடல் யூடியூப்பில் 75 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.

இந்த படத்தின் பாடல்கள் இதுவரை வெளிவந்தவரை சேர்த்து 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்று யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது.இன்னும் 2 பாடல்களின் லிரிக் வீடியோ,படத்தின் வீடியோ பாடல்கள் போன்றவை இல்லாமலேயே இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

நேற்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு , Quit பண்ணுடா பாடலின் லிரிக் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர் இவரது போட்டோஷூட்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளும்.இன்ஸ்டாகிராம் சென்சேஷன் ஆக இருந்த மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் நடித்த பின் வேற லெவல் ரீச்சை பெற்று விட்டார்.

தற்போது தனது பைக் ரைட் புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மாளவிகா மோஹனன்.லாக்டவுனால் இவற்றை மிஸ் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்