தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் படம் 2021 பொங்கலுக்கு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து இவர் வம்சி இயக்கத்தில் தயாராகவுள்ள தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.இதனை தொடர்ந்து இவர் நடிக்கவுள்ள படங்களை இயக்கவுள்ளதாக தற்போதே சில பெயர்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இதில் மாஸ்டர் படத்தினை இயக்கிய லோகேஷ் கனகராஜிற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.இந்த படத்தினை மாஸ்டர் படத்தினை இணைந்து தயாரித்த லலித் குமார் தனது 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கவுள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகி சில நாட்களுக்கு முன் ஒரு வருடம் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

இதுபற்றிய ஒரு ட்விட்டர் ஸ்பேஸ் நடந்தது அதில் பேசிய லோகேஷிடம் ரசிகர் ஒருவர் அடுத்த படத்தை நீங்கள் இயக்குவதாக பேச்சுகள் வருகிறது என்ற கேள்வியை எழுப்பினார்,அதற்கு இல்லை என்று கூறாமல் அதுபற்றி தற்போது எதுவும் சொல்ல முடியாது , சரியான நேரம் வரும்போது சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.கிட்டத்தட்ட இந்த கூட்டணி உறுதியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.