ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பொன்னியின் செல்வன் 2 படக்குழுவின் புது ட்ரீட்... பிரம்மிக்க வைக்கும் PS ANTHEM வீடியோ இதோ!

பொன்னியின் செல்வன் 2 படத்தின் PS ANTHEM வீடியோ,mani ratnam in ponniyin selvan 2 movie ps anthem video out now | Galatta

அடுத்தடுத்து ஆச்சர்யங்களையும் விறுவிறுப்பையும் கூட்டும் அசத்திய நாவலாக உலக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நாவல் பொன்னியின் செல்வன். புகழ்மிக்க எழுத்தாளர் அமரர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் எனும் வரலாற்று புனைவு நாவலை திரைவடிவமாக்க தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்கள் பல முயற்சிகள் செய்து கைவிட்ட நிலையில், இயக்குனர் மணிரத்னம் அதை சாத்தியமாக்கி சாதனை படைத்தார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இரண்டு பாகங்களாக தயாரான இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் ரிலீஸாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடியதோடு ஆல் டைம் ரெகார்டாக 500 கோடிக்கு மேல் வசூலித்தது.

மக்களின் மனம் கவர்ந்த பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. தொழில்நுட்ப ரீதியில் மிக வலுவான தொழில்நுட்ப கலைஞர்களின் படையின் கடின உழைப்பில் பொன்னியின் செல்வன் தயாராகியுள்ளது. அந்த வகையில் கலை இயக்குனராக தோட்டா தரணியையும் ஒளிப்பதிவாளராக ரவிவர்மனும் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத்தும் பணியாற்ற, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சேர்த்துள்ளார்.இந்நிலையில் ரசிகர்களுக்கு புதிய சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் பொன்னியின் செல்வன் PS ANTHEM எனும் புதிய பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடி நடித்துள்ள இந்த பொன்னியின் செல்வன் PS ANTHEM தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அட்டகாசமான அந்த வீடியோ இதோ…
 

ரெமோவை தொடர்ந்து அயலான் படத்திலும் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்த விக்னேஷ் சிவன்... வேற லெவல் அப்டேட் இதோ!
சினிமா

ரெமோவை தொடர்ந்து அயலான் படத்திலும் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்த விக்னேஷ் சிவன்... வேற லெவல் அப்டேட் இதோ!

'நயன்தாராவை முதல் முறை வீட்டிற்கு அழைத்துச் சென்ற தருணம்!'- அழகிய நினைவுகளை பகிர்ந்த விக்னேஷ் சிவன்! வைரல் வீடியோ
சினிமா

'நயன்தாராவை முதல் முறை வீட்டிற்கு அழைத்துச் சென்ற தருணம்!'- அழகிய நினைவுகளை பகிர்ந்த விக்னேஷ் சிவன்! வைரல் வீடியோ

'கமல்ஹாசன் - சிவகார்த்திகேயனின் SK21 பட பணிகள் தொடங்கியதா?'- வைரலாகும் புகைப்படத்தால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
சினிமா

'கமல்ஹாசன் - சிவகார்த்திகேயனின் SK21 பட பணிகள் தொடங்கியதா?'- வைரலாகும் புகைப்படத்தால் உற்சாகத்தில் ரசிகர்கள்!