'கமல்ஹாசன் - சிவகார்த்திகேயனின் SK21 பட பணிகள் தொடங்கியதா?'- வைரலாகும் புகைப்படத்தால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

கமல்ஹாசன் - சிவகார்த்திகேயனின் SK21 பட தகவல்,Kamal haasan sivakarthikeyan in sk21 movie rajkumar periyasamy | Galatta

சின்னத்திரையின் மூலம் மக்களின் மனதில் பதிந்து வெள்ளித்திரையில் வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், தனது கடின உழைப்பாலும் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்தும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர கதாநாயகர்கள் பட்டியலில் முன்னணி இடத்தை பிடித்துள்ளார். முன்னதாக கடந்த 2022ம் ஆண்டில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த டான் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று 100 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், அடுத்த 2022 தீபாவளி வெளியீடாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ப்ரிண்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறத் தவறியது. இதனை அடுத்து வரிசையாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில் முதலாவதாக இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வர தயாராகி வருகிறது. ஏலியன் சயின்ஸ் பிக்சன் காமெடி என்டர்டெய்னர் படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படத்தின் இறுதி கட்ட VFX பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முதல் முறையாக சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திற்காக இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்க வெளிவந்து மிகப்பெரிய கவனம் ஈர்த்த மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். வித்தியாசமான ஆக்ஷன் திரைப்படமாக தயாராகி வரும் மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்த அதிரடியான அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் #SK21 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் SK21 திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய கவனம் ஈர்த்த ரங்கூன் திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் SK21 திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். விரைவில் SK21 திரைப்படத்திற்கான அறிவிப்புகள் வெளிவருமான ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட, சிவகார்த்திகேயன், “நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல ஊக்குவிப்பவர்களை நண்பர்களாக்குங்கள் #SK21” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளதால் SK21 படத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களை செய்திகள் பரவி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்த சில தினங்களில் வெளிவரும் என்றும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். நடிகர் சிவகார்த்திகேயனின் வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

A wiseman once said :
“Make friends who force you to level up”💪👍 #SK21 @Rajkumar_KP @RKFI @sonypicsfilmsin @turmericmediaTM pic.twitter.com/9hyjxRvLnl

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 12, 2023

படப்பிடிப்பில் காயமடைந்த லியோ பட வில்லன் நடிகர் சஞ்சய் தத்... குண்டுவெடிப்பு காட்சி படமாக்கும் போது திடீர் விபத்து! விவரம் உள்ளே
சினிமா

படப்பிடிப்பில் காயமடைந்த லியோ பட வில்லன் நடிகர் சஞ்சய் தத்... குண்டுவெடிப்பு காட்சி படமாக்கும் போது திடீர் விபத்து! விவரம் உள்ளே

SIGN பண்ணப்போ 22வயசு.. ஆனா ரிலீஸாகும் போது 27வயசு!- போடா போடி பட மறக்க முடியாத நினைவுகள் பகிர்ந்த விக்னேஷ் சிவன்! வைரல் வீடியோ
சினிமா

SIGN பண்ணப்போ 22வயசு.. ஆனா ரிலீஸாகும் போது 27வயசு!- போடா போடி பட மறக்க முடியாத நினைவுகள் பகிர்ந்த விக்னேஷ் சிவன்! வைரல் வீடியோ

ருத்ரன் பட இசை வெளியீட்டு விழாவில் 150 குழந்தைகளை தத்தெடுத்த ராகவா லாரன்ஸ்... குவியும் பாராட்டுகள்!
சினிமா

ருத்ரன் பட இசை வெளியீட்டு விழாவில் 150 குழந்தைகளை தத்தெடுத்த ராகவா லாரன்ஸ்... குவியும் பாராட்டுகள்!