தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Malavika Mohanan About Master Vijay and Her Role

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Malavika Mohanan About Master Vijay and Her Role

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.நேற்று இன்ஸ்டாகிராமில் லைவாக  வந்த மாளவிகா மோஹனன் இந்த படம் குறித்த சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.இந்த படத்தில் வேலை பார்த்தது காலேஜ் சென்றது போல ஜாலியான அனுபவமாக இருந்தது என்று அவர் தெரிவித்தார்.

Malavika Mohanan About Master Vijay and Her Role

விஜயின் படங்களுக்கு நான் எப்போதும் ரசிகையாக இருந்துள்ளேன் அவருடன் வேலைபார்த்து மிகவும் மகிழ்ச்சி,நான் வேலைபார்த்தத்திலேயே இவர் தான் சிறந்த சூப்பர்ஸ்டார் என்றும் அவர் தெரிவித்தார்.தற்போது அவர் எனது நெருங்கிய நண்பராக ஆகிவிட்டார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Malavika Mohanan About Master Vijay and Her Role