தமிழ் திரையுலகில் நடிகர், காமெடியன், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் பிரேம்ஜி. இசை சுனாமியான பிரேம்ஜிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நெட்டிசன்களில் இவரும் ஒருவர். 

Actor Chandramouli Comments In Premjis Photo

நடிகர் பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தாடியுடன் இருக்கும் படியும், சிறுவனாக இருக்கும்படியும் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு ஷேவ் செய்திருந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் சந்திரமௌலி, உங்களுக்கு ரகசியமா ஒரு மகன் இருக்கிறான் என்று நினைக்கிறேன் என்று கமெண்ட் செய்துள்ளார். 

Actor Chandramouli Comments In Premjis Photo

பிரேம்ஜி அடுத்ததாக STR நடிக்கும் மாநாடு படத்தில் நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். கல்யாணி ப்ரியதர்ஷன், SJ சூர்யா, பாரதிராஜா, SA சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர்.