FIGHT CLUB: லோகேஷ் கனகராஜ் தயாரிப்பின் முதல் படைப்பு... 'உரியடி' விஜய் குமாரின் அடுத்த அதிரடி பட ஃபர்ஸ்ட் லுக் & ரிலீஸ் திட்டம் இதோ!

லோகேஷ் கனகராஜ் உரியடி விஜய் குமாரின் FIGHT CLUB ஃபர்ஸ்ட் லுக்,lokesh kanagaraj production uriyadi vijay kumar fight club first look | Galatta

இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். அந்த வகையில் தனது G SQUAD தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தொடர்ச்சியாக திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக ஓரிரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன்படி லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் வழங்கும் முதல் படமான FIGHT CLUB திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. உரியடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமான விஜய் குமார் அவர்கள், அடுத்து கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் தான் இந்த FIGHT CLUB. இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதனை அறிவிக்கும் வகையில் தனது X பக்கத்தில், “புதிய தொடக்கம்… விஜய் குமார் மச்சி மற்றும் கேங்கின் FIGHT CLUB திரைப்படத்தை வழங்குவதில் மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். ரசிகர்களை கவர்ந்த FIGHT CLUB திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ...

 

lokesh kanagaraj, lokesh kanagaraj production house, lokesh kanagaraj production movies, lokesh kanagaraj production, lokesh kanagaraj production company name, lokesh kanagaraj production company, lokesh kanagaraj next movie, lokesh kanagaraj new movie, lokesh kanagaraj next movie list, lokesh kanagaraj new movie update,

சூரரைப் போற்று படத்தின் வசனகர்த்தாவான விஜய் குமார் அவர்களின் முதல் திரைப்படமாக அவர் இயற்கை நடித்த உறியடி திரைப்படம் அதன் சண்டை காட்சிகளுக்காக பெரிதும் பேசப்பட்டது. வித்தியாசமான ஆக்சன் படமாக காலம் கடந்தும் பேசப்படக்கூடிய ஒரு படைப்பாக ரசிகர்களால் கொண்டாடப்படும் உறியடி திரைப்படத்தை தொடர்ந்து மற்றொரு அதிரடி ஆக்சன் திரைப்படமாக ஹாலிவுட்டில் பிராட் பிட் கதாநாயகனாக நடித்து உலகளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற FIGHT CLUB என்ற டைட்டில் இந்த படம் வெளிவர இருக்கிறது. அறிமுக இயக்குனர் அப்பாஸ் A ரஹ்மத் திரைக்கதையை எழுதி இயக்கும் இந்த திரைப்படத்திற்கு 96 திரைப்படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைக்க, அறிவு, அசல் கோளார், கானா மைக்கில், ஷர்பு மற்றும் GKB ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கிருபாகரன் படத்தொகுப்பு செய்ய ஏழுமலை ஆதி கேசவன் கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். விக்கி மற்றும் அமிரின் அபூபக்கர் இருவரும் இணைந்து இந்த அதிரடி திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். 

சசி அவர்களின் கதையில் உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு சசி விஜய் குமார் மற்றும் இயக்குனர் அப்பாஸ் A ரஹ்மத் ஆகிய மூவரும் இணைந்து வசனங்களை எழுதி இருக்கின்றனர். கூடுதல் வசனங்களில் லியோ & விக்ரம் திரைப்படங்களின் பாடலாசிரியர் விஷ்ணு எடவன் எழுதி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த 2023 ஆம் ஆண்டின் இறுதியில் அடுத்த மாதம் டிசம்பரில் திரைப்படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர் எனவே வெகு விரைவில் திரைப்படத்தின் டீசர் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் என ஒவ்வொன்றாக வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் அதேபோல் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரும் படங்கள் என்றாலே அது ஆக்சன் படங்கள் தான் என சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை அந்த படங்கள் ஈர்த்திருக்கும் நிலையில், அவரது தயாரிப்பு நிறுவனம் வழங்கும் முதல் படமாக வெளிவரும் FIGHT CLUB திரைப்படம் பெயரிலிருந்து அதிரடியாக இருப்பதால் இதிலும் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.