ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் சார்பாக இயக்குனர் அட்லீ தயாரித்திருக்கும் திரைப்படம் அந்தகாரம். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்த அர்ஜூன் தாஸ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். 

Andhagaram

மேலும் இந்த படத்தில் வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மீஷா கோஷல் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். விஞாராஜன் இயக்கிய இந்த படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

atlee lokesh kanagaraj

அப்பதிவில், அந்தகாரம் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படம். விஞாராஜன் சகோ, உங்கள் எழுத்துக்கு நான் ரசிகன். செம பெர்ஃபார்மன்ஸ் அர்ஜூன் தாஸ், வினோத் கிஷன். வாழ்த்துகள் அட்லி சகோ. இப்போதே உங்கள் கையில் ஒரு வெற்றி படைப்பு உள்ளது என்று படக்குழுவினரை பாராட்டியுள்ளார் நம் மாஸ்டர் இயக்குனர்.