கடந்த 2015-ம் ஆண்டு திரைக்கு வந்த டிமான்டி காலனி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் அஜய் ஞானமுத்து. திகில் திரைப்படமான இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பின்பு அதர்வா, நயன்தாரா அனுராக் கஷ்யப் வைத்து இமைக்கா நொடிகள் என்கிற படத்தை இயக்கினார். இயக்குனருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி தந்தது இப்படம். 

Ajay

தற்போது சியான் விக்ரம் வைத்து கோப்ரா படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஶ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி, இர்ஃபான் பதான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் தளபதியின் துப்பாக்கி படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இவருடன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அந்த புகைப்படத்தில் உள்ளார். 

Ajay

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ரங்கூன் படத்தை இயக்கினார். இருவரும் AR முருகதாஸ் அவர்களின் உதவி இயக்குனராய் இருந்தவர்கள் என்பது கூடுதல் தகவல். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Thuppakki days ❤️❤️ @rajkumarperiasamy Thanks for the pic @vishalsaroee

A post shared by Ajay Gnanamuthu (@aj_gnanamuthu) on