ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் டெடி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். யுவா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

teddy

திருமணத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் சயீஷா இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடைசியாக காப்பான் படத்தில் நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் முடிவடைந்தது. மகிழ் திருமேனி படத்தின் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். 

teddy

படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது பாடல் ஜுக் பாக்ஸ் வெளியானது. ரெடி ஸ்டெடி டெடி, டெடி பியர் தீம் ஆகியவை இதில் சேர்க்கப்பட்டுள்ளது.