தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் துவங்கி இன்று கோலிவுட்டின் நட்சத்திரமாய் ஜொலிப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது நடிப்பால் ஈர்த்து SKவாக திகழ்கிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த காலத்திலே பலருக்கும் ஹீரோவாக திகழ்ந்த சிவகார்திகேயன், ஹீரோவாகி பல வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். தற்போது டாக்டர் மற்றும் அயலான் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்தில் நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில் SK ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் அறிமுகமாகிறார். வினய், யோகிபாபு ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்த டாக்டர் படத்தின் செல்லம்மா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலின் வரிகள் இன்றைய இளைஞர்களை கவரும் விதமாக அமைந்தது. டிக்டாக் பேன் செய்த நேரத்தில் சரியாக வந்து அமைந்தது இந்த பாடல். 

டிஜிட்டல் காலத்து ரொமான்ஸை கண்முன் கொண்டு வந்துள்ளனர் படக்குழுவினர். நடிகர், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி ஒரு சில படங்களில் அவ்வப்போது பாடல்களும் எழுதி வருகிறார் சிவகார்த்திகேயன். கவிஞர் SK தலைகாட்டினால் இளைஞர்களுக்கு கொண்டாட்டம் என்றே கூறலாம். கோலமாவு கோகிலா படத்தில் இவர் எழுதிய கல்யாண வயசு தான் பாடல், ரசிகர்களின் பிலேலிஸ்ட்டை ரூல் செய்து வருகிறது. 

பாடல் 16 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. வெளியான சில நாட்களிலேயே அதிக பார்வையாளர்களை பெற்றும், அதிக லைக்குகளை அள்ளிய பாடல் என்ற பெருமையை இந்த பாடல் பெற்றுள்ளது. இயக்குனர் நெல்சன் சொல்வது போல், சிவகார்த்திகேயனின் செயல் வேற மாறி என்றே கூறலாம். 

இதற்கு முக்கிய காரணம் அனிருத் மற்றும் SK கூட்டணி தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். தற்போது இந்த பாடலுக்கு குழந்தை ஆடும் நடனம் இணையத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக சிவகார்த்திகேயன் ஆடும் ஸ்டெப்புகள் கொண்டு குழந்தை நடனமாடுகிறது. குழந்தைகளுக்கு SK என்றால் தனி பிரியம் தான். அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் திறன் சிவகார்த்திகேயனிடம் உள்ளது என இந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.