கொரோனா வைரஸ் காரணமாக சினிமா சார்ந்த விஷயங்கள் அனைத்தும் இயங்காமல் போனது. திரைப்பட ஷூட்டிங்கும் நடக்காமல் நின்று போனது. இதனால் திரைப்பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். ரசிகர்களோடு உரையாடியும், தங்களது திரைப்பயணம் பற்றியும் பதிவு செய்து வருகின்றனர். இதுதவிர்த்து உடற்பயிற்சி, யோகா, சமையல், டான்ஸ், பாடல் என வீடியோ வெளியிட்டும் வருகின்றனர். 

அப்படி சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் குஷ்புவும் ஒருவர். தற்போது கண்ணில் காயத்துடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், என்ன ஆச்சு என்று அக்கறையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். கண் சம்மந்தப்பட்ட ஆப்பரேஷன் ஏதாவது இருக்குமா ? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர் அவரது ரசிகர்கள். மேலும் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி, சிறிது நாட்கள் ஓய்வு எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார். 

திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு. அரசியலில் பிஸியாக இருக்கும் குஷ்பு, திரைப்படங்கள் தவிர்த்து சீரியலிலும் கலக்கி வருகிறார். லக்ஷ்மி ஸ்டோர்ஸ் எனும் தொடரில் நடித்தார். திரையில் இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது போல், சோஷியல் மீடியாவிலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் குஷ்பு. 

பல நாட்கள் கழித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. இதனால் திட்டமிட்டபடி நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என்பது கடினமாகிவிட்டது. இந்த காரணத்தால் அண்ணாத்த படத்தை பொங்கலுக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.