கன்னடத்தில் முன்னணி நடிகரான யாஷ் நடிப்பில் தயாராகி சில தினங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியாகி செம ஹிட் அடித்து வரும் திரைப்படம் கே ஜி எப் 2.2018-ல் வெளியான இதன் முதல் பாகம் பெரிய ஹிட் அடிக்க இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு பெரிதும் கூடியது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாரான இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பன்மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் அதீத வரவேற்பை பெற்று வருகிறது.ஸ்ரீநிதி ஷெட்டி,ரவீனா டாண்டன்,சஞ்சய் தத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பல இடங்களில் இந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.ரசிகர்களை தாண்டி பல பிரபலங்களும் இந்த பிரம்மாண்ட படத்தினை பார்த்து ரசித்து பாராட்டி வருகின்றனர்.இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதற்கு தற்போது கே ஜி எப் ஹீரோ யாஷ் பதிலளித்துள்ளார்,உங்கள் அன்புக்கு நன்றி,உங்களுடைய டாக்டர் படம் பார்த்து மிகவும் ரசித்தேன் செம படம் என ராக்கி பாய் பாராட்ட,சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.