“மனைவி டார்ச்சர்” பாஜக பிரமுகர் சொந்த காருக்கே தீ வைத்து நாடகமாடியதால் பரபரப்பு!

“மனைவி டார்ச்சர்” பாஜக பிரமுகர் சொந்த காருக்கே தீ வைத்து நாடகமாடியதால் பரபரப்பு! - Daily news

மனைவி தொந்தரவு தாங்க முடியாமல், பாஜக மாவட்டச் செயலாளர் ஒருவர் தனது காரை அவரே தீ வைத்து எரித்து விட்டு, “மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக” நாடகமாடிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சென்னை மதுரவாயல் பகுதியில் தான், இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் ஒன்றாவது தெருவைச் சேர்ந்த 48 வயதான சதீஷ் குமார், பாஜக வில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.

இவர், அந்த பகுதியில் சிறிது செல்வாக்கு மிக்கவராக வலம் வந்த நிலையில், கட்சி சார்ந்த பணிகளில் அதிகம் ஈடுபட்டு வந்தார் என்றும் கூறப்படுகிறது.

இதனால், மதுரவாயல் பகுதியில் இவர் பலருக்கும் அறிமுகமான முகமாக இருந்து வந்தார். 

இப்படியான சூழலில் தான், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளரான சதீஷ் குமார் வீட்டில், நிறுத்தியிருந்த அவருக்கு சொந்தமான கார் 
திடீரென்று தீப்பிடித்து எரிந்து உள்ளது. 

இதனை கண்டு அக்கம் பத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அனைத்து உள்ளனர். 

இதையடுத்து, சதீஷ் குமாரின் உறவினர்கள் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உள்ளனர். அதில், காரில் வந்த ஒரு ஆணும் - பெண்ணும்,  சதீஷ் குமார் கார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றது தெரிய வந்தது.

அத்துடன், இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரமாக வசாரணை நடத்தினர். 

போலீசார் நடத்திய இந்த விசாரணையில், “ 'காரை விற்று நகை வாங்கித் தருமாறு' சதீஷ் குமாரின் மனைவி, சதீஷ் குமாரை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகவும், இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான பாஜக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார், அவரே காரை எரித்து விட்டு, நாடகம் ஆடியது” போலீசாரிக்கு தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், பாஜக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 285 ன் படி, “தீப்பற்றக்கூடிய பொருட்களை மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வேண்டும் என்றே செய்த குற்றத்திற்காக” போலீசார், வழக்குப் பதிவு செய்து, சதீசை அதிரடியாகது கைது செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட சதீசை, எச்சரித்த போலீசார் அவரை ஜாமீனில் அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, மனைவி தொந்தரவு தாங்க முடியாமல், பாஜக மாவட்டச் செயலாளர் ஒருவர், தனது காரை அவரே தீ வைத்து எரித்து விட்டு, நாடகமாடிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment