ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம். முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு பிரபல கன்னட நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்து கன்னடத்தில் தயாராகி இந்தியாவின் பிற மொழிகளிலும் வெளிவந்த கேஜிஎஃப் சாப்டர் 1 திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் சாப்டர் 2 ரிலீஸாகியுள்ளது.

இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில்,  பிரம்மாண்டமான அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகியுள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தையும் HOMBALE பிலிம்ஸ் தயாரித்துள்ளது. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் வெளியாகியுள்ள கேஜிஎஃப் சாப்டர் 2  எதிர்பார்த்தபடியே அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

ரிலீசுக்கு முன்பே முன்பதிவில் தனது வசூல் வேட்டையை ஆரம்பித்த கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம், இந்தியாவில் ரிலீசான ஒரே நாளில் 134.5 கோடி வசூல் சாதனை செய்து பாக்ஸ் ஆபீசை அதிர விட்டிருக்கிறது. இதனிடையே கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தில் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் யஷ் பேசும் அதிரடி வசனத்தை பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பேசும் வீடியோ தற்போது வெளியானது.

முன்னதாக அல்லு அர்ஜுனின் புட்டபொம்மா பாடலுக்கு நடனமாடி ட்ரெண்ட் செய்த டேவிட் வார்னர் தொடர்ந்து புஷ்பா திரைப்படத்தின் வசனத்தையும் பேசி வைரல் ஆக்கினார். இந்த வரிசையில் கேஜிஎஃப் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வயலன்ஸ் வசனத்தை வார்னர் ஸ்டைலாக பேசும் ரீல்ஸ் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோ இதோ…