மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஹெலன் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான அன்பிற்கினியாள் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் அருண்பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் தந்தை-மகளாக நடித்துள்ளனர். இருவரின் ஆரம்பக் கட்ட அன்பு காட்சிகளும் அதன் பின்னர் வரும் த்ரில் காட்சிகளும் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. 

பிரவீன், ரவீந்திரா, பூபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசை அமைத்துள்ளார். இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்பட ஒருசில திரைப்படங்களை இயக்கியுள்ள கோகுல் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவும், பிரதீப் ராகவ் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை அருண்பாண்டியன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போதே மிகப் பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அன்பிற்கினியாள் படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, கொரோனா குமார் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் இயக்குநர் கோகுல். இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் திரையரங்க உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி கைப்பற்றியுள்ளது. கடைசியாக ட்ரிப் திரைப்படத்தை வெளியிட்டனர். 

இயக்குனர் கோகுல் கைவசம் கொரோனா குமார் திரைப்படம் உள்ளது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகம் தான் கொரோனா குமார். இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்று செய்திகள் கசிந்து வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் படத்தின் ஷூட்டிங் அப்டேட் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.