சசிகுமார் நடிப்பில் தயாராகி வரும் படம் பகைவனுக்கு அருள்வாய். இந்த படத்தை அனிஸ் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே திருமணம் என்னும் நிக்கா என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சசிகுமாரோடு வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. 

இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், சுப்ரமணியபுரம் ஸ்டைலில் 1980 களில் நடக்கும் கதையாகவும், தற்போது நடக்கும் கதையாகவும் உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தற்போது முடிந்துள்ளது. 

இதையடுத்து சசிகுமார் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அனிஷ் இயக்கத்தில் பகைவனுக்கு அருள்வாய் படப்பிடிப்பு இனிதே நிறைவடந்தது ! இக்குழுவினருடன் பணி புரிந்தது மிக்க மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார். 

சசிகுமார் கைவசம் ராஜவம்சம் படம் உள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் எம்.ஜி.ஆர் மகன். இந்தப் படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். விரைவில் இந்த படமும் வெளியாகவுள்ளது. 

விருமாண்டி இயக்கவிருக்கும் புதிய படத்தில் சசிகுமார் தான் நாயகனாக நடிக்கவுள்ளார். பரதன் ஃபிலிம்ஸ் சார்பில் ஆர். விஸ்வநாதன் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். பரதன் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் மூன்றாம் படமாகும். ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய சிவா நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.