தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித். நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான தல பிரகாஷ் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்தது ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #RIPThalaPRAKASH ஹாஷ்டேக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதையும் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

தல தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ஒரு உயிர் இன்று நம்மிடையே இல்லை என தல பிரகாஷின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

தல பிரகாஷ் சாதாரண அஜித் ரசிகர்கள் அல்ல, தனது உடல் முழுக்க அஜித் பெயரை மட்டுமே பச்சைக் குத்திக் கொண்டு எப்போதுமே தல நினைவுகளுடனே வாழ்ந்து வந்த ஒரு இளைஞர். இவ்வளவு சிறு வயதில் என்ன பிரச்சனை காரணமாக இப்படியொரு முடிவை எடுத்தார் என்றே தெரியாமல் அஜித் ரசிகர்கள் குழம்பித் தவித்து வருகின்றனர்.

தல பிரகாஷ் இறந்த செய்தி அறிந்த ஏகப்பட்ட தளபதி ரசிகர்களும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அதனை போராடி சமாளிக்க வேண்டும். நம்மை நம்பி நமது குடும்பம் இருக்கிறது. தற்கொலை எதற்கும் தீர்வாகாது என ஏகப்பட்ட ரசிகர்களும் மற்ற ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லும் நோக்கில் பல பதிவுகளை போட்டு வருகின்றனர். 

ஜீ தமிழின் சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஆர்.ஜே. விஜய்யிடம் தனது உடம்பில் உள்ள அத்தனை தல அஜித்தின் டாட்டூக்களையும் காட்டும் வீடியோவையும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். நடிகர் அஜித்தின் பிறந்தநாள், அவருடைய திறமைகள் என பலவற்றையும் பச்சைக் குத்திக் கொண்ட ஒரு ரசிகர் தற்கொலை செய்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

நடிகர் அஜித் சார்பாக ஏகப்பட்ட ரசிகர்கள் தல அஜித்தின் புகைப்படத்தை பதிவிட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சமீபத்தில் நடிகர் யஷ்ஷின் ரசிகர் ஒருவரும் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலக ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.