லிப்ட் பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய கவின் ! வைரல் வீடியோ
By Aravind Selvam | Galatta | April 28, 2021 19:26 PM IST
பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார்.
பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அமிர்தா ஐயர் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.வினீத் வரப்ரஸாத் இந்த படத்தை இயக்குகிறார்.பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்திற்கு லிப்ட் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிகில் படத்தில் நடித்த காயத்ரி ரெட்டி நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
சிவகார்த்திகேயன் பாடிய இந்த படத்தின் முதல் பாடல் என்ன மயிலு சமீபத்தில் வெளியானது.இந்த பாடல் சமூகவலைத்தளங்களில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.தற்போது இந்த படத்தின் நாயகன் கவின்,பாவக்கதைகள் படத்தின் மூலம் பிரபலமான ஜாபருடன் இந்த பாடலுக்கு நடனமாடி ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Cook with Comali sensation Pavithra pairs with Kathir for her new film!
28/04/2021 06:00 PM
Latest exciting update on Suriya's next film | Ramya Pandian | Check Out
28/04/2021 05:24 PM
Director Ram picks this young sensational hero for his next - Big News!
28/04/2021 04:00 PM