பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார்.

பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அமிர்தா ஐயர் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.வினீத் வரப்ரஸாத் இந்த படத்தை இயக்குகிறார்.பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு லிப்ட் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இன்று படத்தின் நாயகன் கவினின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிகில் படத்தில் நடித்த காயத்ரி ரெட்டி நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.நேற்று தனது இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் பேசி வந்த காயத்ரி ரெட்டி இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.அமிர்த்தா ஐயர் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் காயத்ரி ரெட்டி.இருவரும் இணைந்து பிகில் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டப்பிங் வேலைகள் கடந்த மாதம் நிறைவடைந்தது.இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக டான்ஸ் ஒத்திகையில் கவின் ஈடுபட்டுள்ள சில வீடியோக்களை நடன இயக்குனர் சதிஷ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.இன்றும் சில வீடியோக்களை அவர் பகிர்ந்துள்ளார் இதில் கவினின் டான்ஸ் ஸ்டெப்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.