"எத்தன குண்டு போட்டாலும் இந்த ஜப்பான அழிக்க முடியாது!"- கார்த்தியின் 25வது படமாக வரும் ஜப்பான் பட அட்டகாசமான டீசர் இதோ!

கார்த்தியின் 25வது படமாக வரும் ஜப்பான் பட அட்டகாசமான டீசர்,karthi in japan movie teaser out now | Galatta

தனக்கென தனி பாணியில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் உருவாக்கி இருக்கும் ஜப்பான் திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் தற்போது வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெவ்வேறு விதமான கதைக்களங்களில் அமைவது வழக்கம். அந்த வகையில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய படங்களில் ஒன்றாக அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய படங்களின் இயக்குனர் நலன் குமாரசாமி அவர்களின் இயக்கத்தில் தனது 26 ஆவது திரைப்படமாக உருவாகும் #கார்த்தி26 திரைப்படத்தில் தற்போது கார்த்தி நடித்து வருகிறார். 

இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் அவரது 27 வது படமான கார்த்தி 27 திரைப்படத்தை 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் எழுதி இயக்குகிறார். கடைக்குட்டி சிங்கம் மற்றும் விருமன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து கார்த்தியின் இந்த #கார்த்தி27 திரைப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்தி உடன் இணைந்து அரவிந்த் சுவாமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் #கார்த்தி27 படத்தில் 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். இந்த வரிசையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே கார்த்தியின் 25வது திரைப்படம் ஆக வெளிவர தயாராகி வரும் திரைப்படம் தான் ஜப்பான். தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் முதல்முறையாக கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில்  முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வாகை சந்திரசேகர் மற்றும் பவா செல்லதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்யும் ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

மிகப்பெரிய நகைக்கடை ஒன்றில் நடைபெறும் திருட்டு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படமாக கார்த்தியின் திரைப்பயணத்திலேயே வித்தியாசமான திரைப்படமாக தயாராகி இருக்கும் ஜப்பான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தீபாவளி வெளியீடாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் & SJ.சூர்யா இணைந்து நடித்திருக்கும் ஜிகர்தண்டா படமும், நடிகர் விக்ரம் பிரபுவின் ரெய்டு படமும் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ஜப்பான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்களை கவரும் வகையில் அட்டகாசமான ஜப்பான் படத்தின் புதிய டீசர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது அட்டகாசமான அந்த டீசர் இதோ...