மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமாக தயாராகியுள்ளது தலைவி திரைப்படம். இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சுவாமியும் மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் கதாபாத்திரத்தில் சமுத்திரகனியும் மேலும் பூர்ணா & மதுபாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.

முன்னதாக வெளியான தலைவி திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி தலைவி திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது தலைவி படத்தின் அசத்தலான மேக்கிங் வீடியோ வெளியானது.

சில தினங்களுக்கு முன்பு தலைவி திரைப்படத்திலிருந்து கண்ணும் கண்ணும் பேசப்பேச எனும் அழகான பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த மேக்கிங் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.