தமிழ் சினிமாவின் மிகவும் குறிப்பிடப்படும் இயக்குனராகவும் தேர்ந்த நடிகராகவும் வலம் வரும் சமுத்திரக்கனி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமாக தயாராகியுள்ள தலைவி திரைப்படத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.

மேலும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகும் இந்தியன் 2, பிரம்மாண்ட இயக்குனர் S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் தயாராகியுள்ள RRR, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கான பீம்லா நாயக், மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா, சிவகார்த்திகேயனின் டான், பிரசாந்தின் அந்தகன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான S.A.சந்திரசேகர் எழுதி இயக்கும் நான் கடவுள் இல்லை படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகிளாக இனியா மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்டார் மேக்கர்ஸ் தயாரிப்பில், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைக்க மகேஷ்.கே.தேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நான் கடவுள் இல்லை படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது. சமுத்திரக்கனியின் அதிரடியான அந்த மோஷன் போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.