தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷ்ணு விஷால் நடித்துக் கடைசியாக வெளிவந்த திரைப்படம் காடன். இதனையடுத்து  இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் தயாராகி வரும் மோகன்தாஸ் திரைப்படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். 

விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் F.I.R திரைப்படம் தயாராகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் இத்திரைப்படத்தை தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோ சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார். 

F.I.R திரைப்படத்தில் நடிகைகள் மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான் மற்றும் ரைஸா வில்ஸன் கதாநாயகிகளாக நடிக்க இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டா - நடிகர் விஷ்ணு விஷால் திருமணம் சில வாரங்களுக்கு முன்பு கோலாகலமாக நடைபெற்றது. இவர்களின் இந்த திருமண வீடியோவை தற்போது விஷ்ணுவிஷால் வெளியிட்டுள்ளார். ட்ரெண்டாகும் அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.