'தமிழின்றி நாம் இல்லை!'- விஜய் டிவி ப்ரோமோவில் மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின்! அட்டகாசமான வீடியோ இதோ

விஜய் டிவி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு ப்ரோமோவில் முதல்வர் மு க ஸ்டாலின்,chief minister mk stalin in thamizh pechu engal moochu vijay tv | Galatta

தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றாக சின்னத்திரை ரசிகர்களுக்கு ஃபேவரட் சேனலாக திகழ்கிறது விஜய் டிவி. குறிப்பாக ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே விஜய் டிவி தான் என்று சொல்லும் அளவிற்கு வித்தியாசமான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் மனதை வென்றதோடு பல சேனல்களுக்கும் முன்னுதாரணமாக விஜய் டிவி விளங்குகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களிடையே தமிழின் பெருமையை பேசும் வகையில் தமிழின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விஜய் டிவி நடத்திய நிகழ்ச்சி தான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு. 

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி தமிழகத்தின் ஒவ்வொரு ஊர்களிலும் அதற்கான போட்டியாளர்களுக்கான தேடலை நடத்தி தேர்ந்த தமிழ் ஆர்வலர்களையும் பேச்சாளர்களையும் தமிழ் மக்களுக்கு முன்னுறுத்தி காட்டியது. சிறந்த தமிழ் பேச்சாளர்களை தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டும் வகையில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய வரவேற்பை பெற்றதோடு தமிழ் மீது மக்களுக்கான காதலை இன்னும் அதிகரித்தது.

இந்நிலையில் மீண்டும் விஜய் தொலைக்காட்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை நடத்த தயாராகி இருக்கிறது. இதனை அறிவிக்கும் வகையில் வெளிவந்த முதல் அறிவிப்பு ப்ரோமோ வீடியோவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களே தமிழின் பெருமையை பேசி துவக்கி வைத்தது இன்னும் எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது. இதுகுறித்து விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ் பாராட்டும் முதல்வருக்கு நன்றி! தமிழ் போல் மொழி இல்லை… தமிழின்றி நாம் இல்லை… தமிழ் பேச்சு எங்கள் மூச்சு விரைவில் உங்கள் விஜயில்..” எனக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசிய அந்த அட்டகாசமான புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில், “தமிழுக்கும் அமுதென்று பேர்… அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்... என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். தமிழை தமிழே என அழைப்பதில் இருக்கும் இன்பம் வேறு எதிலுமே கிடையாது என்றார் தமிழின தலைவர் கலைஞர்... இத்தகைய வெள்ள தமிழை வெல்லும் தமிழை களமாக்கி நடைபெறும் நிகழ்ச்சி தான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு! பேச்சு மூச்சாக இருக்க வேண்டும் அதுவும் தமிழ் பேச்சாக இருக்க வேண்டும் அதுவும் சுயமரியாதை பேச்சாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்… அந்த வகையில் என் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி” என்று பேசும் இந்த ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அட்டகாசமான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
 

தமிழ் பாராட்டும் முதல்வருக்கு நன்றி 🙏 @mkstalin

தமிழ் போல் மொழி இல்லை..
தமிழின்றி நாம் இல்லை..
தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு ♥️ விரைவில்.. உங்கள் விஜயில்.. #ThamizhPechuEngalMoochu #TPEM pic.twitter.com/anQX1IHyZw

— Vijay Television (@vijaytelevision) March 22, 2023

'இசையமைப்பாளர் இளையராஜா என் குரு... ஆனாலும் அவர் மட்டமான மனிதர்!'- ஜேம்ஸ் வசந்தனின் காட்டமான விமர்சனம்! வீடியோ இதோ
சினிமா

'இசையமைப்பாளர் இளையராஜா என் குரு... ஆனாலும் அவர் மட்டமான மனிதர்!'- ஜேம்ஸ் வசந்தனின் காட்டமான விமர்சனம்! வீடியோ இதோ

காதல் கணவரின் இயக்கத்தில் நடித்த பிரபல சீரியல் நடிகை... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் அசத்தலான குறும்படம் இதோ!
சினிமா

காதல் கணவரின் இயக்கத்தில் நடித்த பிரபல சீரியல் நடிகை... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் அசத்தலான குறும்படம் இதோ!

'கார்த்திகை தீபம் சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?'- விவரம் உள்ளே
சினிமா

'கார்த்திகை தீபம் சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?'- விவரம் உள்ளே