தமிழ்நாட்டில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனம் கவர்ந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. முன்னதாக சன் டிவியில் வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தொடர்ந்து விஜய் டிவியின் ஆண்டாள் அழகர், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் உயிர்மெய், ராஜ் டிவியின் என் இனிய தோழியே ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். தொடர்ந்து மீண்டும் சன் டிவியில் அன்பே வா கலர்ஸ் டிவியில் அபி டெய்லர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சீதாராமன் எனும் புத்தம் புதிய சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
சின்னத்திரை மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் மசாலா படம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக களமிறங்கிய நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்த புஷ்பா கதாபாத்திரத்தால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்தார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் இடம் பெற்ற புஷ்பா கதாபாத்திரமும் புஷ்பா புருஷன் என்ற வாசகமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கோ 2, மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்பிள்ளே, பேய் மாமா, 3:33 உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடங்களில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நடித்துள்ளார்.
இருப்பினும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டிக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே தற்போது குவிந்து இருக்கிறது. இந்த நிலையில் நமது கலாட்டா சேனலில் நடைபெற்ற FANS MEETல் ரசிகர்களோடு இணைந்து ரேஷ்மா பசுபுலேட்டி கலந்துரையாடினார். அந்த வகையில் பேசிய போது, "ரியல் பாக்யா(KS.சுசித்ரா ஷெட்டி) இருக்கிறார்கள் அல்லவா? அவருக்கு ஒரு போன் செய்து LOVE YOU சொல்லுங்கள்? எனக் கேட்டபோது,
"நிஜ வாழ்க்கையில் நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்" என தெரிவித்த ரேஷ்மா, KS.சுசித்ரா ஷெட்டிக்கு போன் செய்தார். தொடர்ந்து பேசியபோது "இங்கே பார் பாக்யா உன் கதாபாத்திரத்தை வைத்து இங்கே என்னை வைத்து செய்கிறார்கள் என்னை எல்லோரும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்" என ரேஷ்மா சொல்ல, "யாரும் திட்டாதீங்க… யாரும் திட்டாதீங்க.. யாரும் ராதிகாவ திட்டாதீங்க அவ ரொம்ப நல்லவ.. Fraud பண்ணது கோபி தான்.. கோபியத்தான் நீங்க திட்டனும் ராதிகாவை திட்டக்கூடாது. ஏனென்றால் அவங்களும் கொஞ்சம் அப்பாவி மாதிரி தான் இருக்காங்க…" என பேசியது நிகழ்ச்சியை கலகலப்பாக்கியது. இந்த கலகலப்பான நிகழ்ச்சியின் முழு வீடியோ இதோ…