மலையாள படங்களுக்கு திரை விரும்பிகளிடம் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுகள் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. அப்படி சமீபத்தில் அமோகமான வரவேற்பை பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும். இந்த படத்தில் நடிகர் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் முக்கிய பாத்திரத்தில் நடித்தனர். 

John Abraham In Ayyapanum Koshiyum Remake

விமர்சன ரீதியாகவும், கமர்ஷியல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்நிலையில் இந்த பிளாக்பஸ்டர் படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த படத்திற்காக நடிகர் சசிகுமாரிடம் பேசி ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்றும், மற்றொரு ரோலுக்காக நடிகர் ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை போய் கொண்டிருப்பதாக தகவல் தெரியவந்தது. 

John Abraham In Ayyapanum Koshiyum Remake

தற்போது இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை ஜான் அப்ரஹாம் கைப்பற்றியுள்ளார். இதுகுறித்து அவர் செய்த பதிவில், அதிரடி மற்றும் த்ரில் மட்டுமே ஒரு நல்ல கதைக்கான சமநிலையைத் தரும். இதுபோன்ற தரமான கதைகளை எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல நாங்கள் ஆர்வமாக உள்ளோம் என்று கூறியுள்ளார்.